Advertisment

திருமணம் ஆன புதுப்பெண்...சந்தேகம் அடைந்த மாப்பிளை...விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன நான்கு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சேர்ந்த அன்பு என்பவருக்கும் லோகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே அன்புவிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவர் அன்பு சந்தேகப்படுவது, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது ஆகியவற்றால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார் லோகேஸ்வரி. பின்பு கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கணவனிடம் ஏற்பட்ட சண்டையால் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். குடும்ப பிரச்சனையில் மனமுடைந்த லோகேஸ்வரி தனது தாயார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

incident

இதனை அடுத்து லோகேஸ்வரி பெற்றோர் அன்பு மீது போலீஸ் காவல் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் லோகேஸ்வரியை அன்பு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் தங்களது மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் அன்புவை விசாரிக்க அவரை தேடி வந்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து அன்பு தலைமறைவாகியுள்ளார். பின்பு விசாரணையில் ஆந்திராவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். தலைமறைவாக இருந்த அன்பு அந்த லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரித்த போது, போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமான நான்கு மாதங்களில் மனைவி மட்டும் கணவர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஒரு சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் இரு வீட்டாரும் மிகுந்த மனவேதனை அடைதந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment

complaint couple family problem incident young
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe