/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died-1_46.jpg)
திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு, தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பூந்தமல்லியைச் சேர்ந்த அனிதாவுக்கு திருமணம் முடித்து வைக்க, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால், தன்னுடன் பணியாற்றும் ஆவடியைச் சேர்ந்த உதயா என்பவரை அனிதா காதலித்ததாகவும், இருவரும் இரண்டு தினங்களுக்கு முன் ராயப்புரத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், தனது கணவர் உதயாவின் வீட்டிற்கு சென்ற அனிதா, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அனிதாவின் உடலை கைப்பற்றிப் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் செய்துக் கொண்ட இரண்டே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்துக் கொண்டதால், ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)