newly married woman passed away

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் - எழிலரசி தம்பதியினரின் மகன் பன்னீர்செல்வத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த தெய்வசிகாமணி - லஷ்மி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisment

சொந்த உறவினர் மகளை திருமணம் செய்து கொண்ட பன்னீர்செல்வம், இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். அவரது மனைவி சந்தியா பாண்டிச்சேரியில் டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் இன்று தனது கணவனான பன்னீர்செல்வம் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, சந்தியா குளித்துவிட்டு வருவதாக அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததை கண்ட அவரது உறவினர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

சந்தியாவின் கணவரான பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி எட்டுநாட்கள் மட்டுமே ஆன நிலையில், இளம்பெண் கணவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? திருமணத்திற்கு முன்பு காதல் விவகாரம் ஏதாவது உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.