Advertisment

புதுமாப்பிள்ளை தற்கொலை... மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்த தாய்!

newly married man commits suicide ... Mother who reported suspicion in death

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ளது வடதொரசலூர். இப்பகுதியை சேர்ந்தவர் ஜான் பாஷா. இவரது மகன் ஜாகீர்உசேன்(28). இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ஜாகீர் உசேன் கடந்த 8ஆம் தேதி ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சமயம் அவரது வீட்டுக்கு வந்த உறவினர்கள் ஜாகீர் உசேன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாகீர் உசேன் உடலை மின்விசிறியில் இருந்து கீழே இறக்கி வைத்தனர். இதுகுறித்து அவரது தாயார் நூர்ஜகான் தியாகதுருகம் காவல் நிலையத்தில் தனது மகனின் மரணம் குறித்து சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேன் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து ஒரு மாதத்தில் கணவர் இறந்ததை பார்த்து அவரது மனைவி ஆயிஷா கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜாகீர் உசேன் மும்பையில் ஆட்டோ ஓட்டி வந்த போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் விஷயம் அவரது மனைவி ஆயிஷாவுக்கு தெரியவரவே கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனமுடைந்த ஜாகீர் உசேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe