Advertisment

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதிகள் தஞ்சம் 

newly married couple took shelter in Police  seeking protection

Advertisment

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரண். கோவிந்தசாமி தேங்காய் உரிக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்னை சரண் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பிறகு ஊருக்கு வந்த இருவரையும் பெண் வீட்டார் கடுமையாக அடித்து துன்புறுத்தி ஊருக்குள் வரக்கூடாது எனத்துரத்தி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜோடி, திருமண கோலத்துடன் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe