இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. தற்போது இருந்துவரும் தளர்வுகளுடனான முழு ஊரடங்கைத் தொடர்ந்து வரும் 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடனான முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது.

Advertisment

அதேவேளையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றையும் தமிழக அரசு அதிகப்படுத்திவருகிறது. அந்தவகையில் சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள வெஸ்லி பள்ளி மைதானத்தில் 130 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கான பாதுகாப்பு மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

Advertisment