Advertisment

புதுமண தம்பதிகள் தற்கொலை; காரணம் தெரியாத கவலை; ஆராயும் போலிஸ்!!

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு - கவிதா தம்பதியரின் மகன் விஜி என்றவிஜயகுமார். 27 வயதான விஜயகுமாருக்கு ஆலங்காயம் அடுத்த பொத்தரை கிராமத்தை சேர்ந்த 21 வயதான பிரியா என்பவரை கடந்த 2018 அக்டோபர் மாதம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

Advertisment

 Newborn couple commit suicide;  Police investigating

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இருவீட்டார் பார்த்து நடத்திய திருமணம்மிது. திருமணம்மானதும் வீராங்குப்பத்தில் கணவன் - மனைவி இருவரும் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தனர். விஜி தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவார். கணவன் - மனைவி இருவரும் சண்டைப்போட்டு அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்கள் யாரும் இதுவரை பார்த்ததில்லை.

இந்நிலையில் ஜனவரி 25ந்தேதி இரவு கணவன் - மனைவி இருவரும் நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவு உள்பக்கமாக தாள்போடப்பட்டுயிருந்தது. இதனால் சந்தேகமான அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் அங்கு வந்து கதவை தட்டியுள்ளனர். யாரும் கதவை திறக்கவில்லை, உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் கதவை உடைத்து பார்த்தபோது விஜி, கயிற்றால் தூக்கில் தொங்கியபடி இருந்தார். அவரது மனைவி ப்ரியா கீழே படுத்துக்கிடந்தார். அவர் அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் கண்ணீர் விட்டனர். அவர்களது உடலை கைப்பற்றிய ஆம்பூர் போலிஸார், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொண்டும்போய் உடலை கூறாய்வுக்காக வைத்தனர். இருவரின் பெற்றோர்க்கு தகவல் தெரரவித்தனர். அவர்கள் வந்து புகார் தந்தபின், எதனால் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என விசாரணை நடத்திவருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்டவர்களின் வீட்டை ஆராய்ந்த போலிஸாருக்கு கடிதம், ஆடியோ என எதுவும் கிடைக்கவில்லை. இதனால் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

திருமணம் முடிந்து 3 மாதம்மே ஆன நிலையில் கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்துக்கொண்டது எதனால், என்ன பிரச்சனை, தானாக முன்வந்து தற்கொலை செய்துக்கொண்டார்களா அல்லது யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா என பல்வேறு கோணங்களில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் தம்பதிகள் தற்கொலை செய்துக்கொண்டது உறவினர்களை மட்டும்மல்லாமல் அப்பகுதி மக்களை கலங்கவைத்துவிட்டது.

police Vellore murder
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe