A newborn baby who fought for his life; Ambulance driver brought from Annur to Coimbatore in 27 minutes and rescued!

வட மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகான் இவரது மனைவி மாமுனி இவர்கள் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கருவலூர் தனியார் நூல் மில்லில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நம்பியூர் அரசு மருத்துவமனையில் மாமுனிக்கு குழந்தை பிறந்தது.

Advertisment

பிறந்த குழந்தைக்கு சிறுநீரகப்பிரச்சனை இருந்ததால் சிறுநீர் கழிக்க முடியாமல் குழந்தையின் வயிறு உப்பியது. அபாயக் கட்டத்தில் இருந்த குழந்தையைப் பார்த்துப் பதறிய பெற்றோர் உடனடியாக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

Advertisment

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸில் குழந்தையைக் கொண்டு செல்ல முயன்றனர்.

காலதாமதம் ஆனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்த, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் உடனடியாக கோவைக்குச் செல்ல சம்மதித்தார்.பின்னர் குழந்தை அபாய நிலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisment

Ad

மேலும் பரபரப்பான அன்னூர் கோவை நெடுஞ்சாலையில் குழந்தையை காப்பாற்றும் நோக்கில், சாலையில் கவனமாக வேகத்துடன் ஆம்புலன்சை இயக்கி 27 நிமிடத்தில் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பொதுமக்கள்அன்பையும் பாராட்டுகளையும்தெரிவித்து வருகின்றனர்.