ADVERTISEMENT

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை... அரசு அறிவிப்பு!!

06:47 PM Dec 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தற்பொழுது மீண்டும் பல நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம் அலையாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி, தமிழகத்தில் சாலைகள் மற்றும் அனைத்துக் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தளர்வுகளின் அடிப்படையில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT