Advertisment

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்!

மலர்ந்தது 2021 புத்தாண்டு - நள்ளிரவில் குதூகலத்துடன் புதிய ஆண்டை மக்கள் வரவேற்றனர்.

Advertisment

2021 புத்தாண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்று மக்கள் கொண்டாடினர். தமிழகத்தில் வீடுகளில் இருந்தபடியே மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். பொது இடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

Advertisment

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பொதுமக்கள் குவிந்தனர்.அதேபோல் வேளாங்கண்ணி பேராலயம், கோட்டாறு சவேரியார் பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழக மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

India Newyear celebration 2021 Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe