Published on 01/01/2023 | Edited on 01/01/2023

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் கேக் வெட்டி ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதில் திரளான மக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புத்தாண்டைக் கொண்டாடினர். கூட்ட நெரிசல் அதிகமானதால், அதனைக் கட்டுப்படுத்த போலீசாரால் லேசான தடியடி நடத்தப்பட்டது.