Advertisment

கட்டபொம்மனைத் தூக்கிலிட்டோரின் ஆங்கிலப் புத்தாண்டு! -வம்சாவளியினரின் ‘புறக்கணிப்பு’ தீர்மானம்!

new year 2021 veerapandiya kattabomman

‘நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை நாமும் கொண்டாடுவதா? நமக்குத்தான் தமிழ்ப் புத்தாண்டு இருக்கிறதே!’ என்ற சிந்தனை தமிழர்களில் பலருக்கும் உண்டு. ஆனாலும், நண்பர்கள் பகிரும் 'HAPPY NEW YEAR' வாழ்த்துகளை புறந்தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் பண்பு மிக்கவர்கள் அநேகம்பேர்.

Advertisment

மாவீரன் என்றும் தேசத்தின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்தவர் எனவும், வீரபாண்டிய கட்டபொம்மனை வரலாறு பதிவு செய்துள்ளது. கட்டபொம்மனின் வம்சாவளியினர், ‘எங்க தாத்தா கட்டபொம்மனைத் தூக்கிலிட்டுக் காவு வாங்கியவர்கள், ஆங்கிலேயர்கள்.

Advertisment

அவர்களின் புத்தாண்டை ஒருபோதும் நாங்கள் கொண்டாட மாட்டோம்; வாழ்த்துகளைப் பகிரவும் மாட்டோம்.’என்று உறுதிபூண்டு, ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர். இதனைவீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றியுள்ளது.

Celebration newyears
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe