Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கன்னியாகுமாியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
k

       

   சென்னை, பாண்டிச்சோி போன்று ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட கன்னியாகுமாியிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூா் வாசிகள் குவிவது வழக்கம். அதே போல் 2019 புது வருஷத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட இப்போதே அவா்களின் வருகை அதிகாித்துள்ளது. இதற்காக கன்னியாகுமாியில்  அங்குள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளன. மேலும் காதலா்களுக்கு மட்டும் என்று பல விடுதிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. விடுதிகள் உள்ள பாா்களிலும் வெளி நாட்டு சரக்குகள் இறக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஓட்டல்களில் அழகிகளின் நடனத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனா்.

 

             மேலும் குடும்பத்தினருடன் ஓட்டலில் புத்தாண்டை கொண்டாட  அசைவ உணவுகளுடன் தலா ஓவ்வொரு குடும்பத்தினருடன் 6000- த்தில் இருந்து 15ஆயிரம் ருபாய் வசூலிக்கப்பட்டு வருகின்றனா். ஒட்டல்களுக்கு வழக்கம் போல் போலிசாா் கடும் கட்டுபாட்டை விதித்துள்ளனா். இதற்கு ஓட்டல் உாிமையாளா்கள் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். அதே போல் ரோடுகளில் இளைஞா்கள் பைக் ரைசில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசாா் எச்சாித்துள்ளனா். 

 

             மேலும் நள்ளிரவு கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

 

            2019-ஐ வரவேற்கும் விதமாக அனைத்து கோவில்கள் மற்றும் சா்ச்களில் நள்ளீரவு சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் 2019-ஐ வரவேற்க அனைத்து மக்களும் ஆவலோடு உள்ளனா்.

                

               

ReplyForward

   

சார்ந்த செய்திகள்