Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

New Vice Chancellor appointed for Annamalai University

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய முருகேசன் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் துணைவேந்தர் நியமிக்கத்தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புலத்துறைத் தலைவராகவும், புல முதல்வராகவும் சிறப்பாக பணியாற்றிய ஆர். எம். கதிரேசனை சனிக்கிழமையன்று சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் புதிய துணைவேந்தராக நியமித்து அதற்கான ஆனையை வழங்கினார். இவர் பணியாற்றும் காலத்தில் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக வேளாண் துறையில் கூட்டு பண்ணையம் திட்டம் மற்றும் பார்த்தீனியம் செடி ஒழிப்பு திட்டத்தின் சிறப்பாக பணியாற்றியதற்காக மத்திய அரசு, தமிழக அரசு இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

governor vice chancellor Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe