புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

traffic

குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அபராத தொகைகள் அனைத்தும் பல மடங்குகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

Advertisment

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மேலும் இந்த கடுமையான அபராதங்கள் என்பது விதிமீறல்களை தடுக்கத்தான் தவிர, அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்காக இல்லை" என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், மத்திய அரசு கொண்டுவந்த அபராத தொகைகளை அம்மாநில அரசு குறைத்துள்ளது. இந்த நிலையில் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், “போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத கட்டணம் குறைக்கப்படும். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி அபராத தொகை குறைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Advertisment