Advertisment

தேசிய நெடுஞ்சாலையில் ரூ.41.37 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை! - ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. பெருமிதம்!

New tarmac on National Highway at a cost of Rs.4 1.37 crore says thangapandian mla

சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, முடிந்த அளவுக்கு தங்களின் தொகுதிக்கான திட்டங்களைக் கொண்டுவருவதில் முனைப்புடன் இருப்பார்கள். ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தொகுதி மக்களிடம் தொடர்ந்து நல்ல பெயரெடுப்பதோடு, அதைத் தக்கவைத்துக்கொள்வதிலும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறார். ‘நமது மக்கள் எம்.எல்.ஏ.’என்ற அடைமொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் தனது எம்.எல்.ஏ. சம்பளத்தை தொகுதி மக்களின் நலன் சார்ந்த காரியங்களுக்காகச் செலவிட்டு வருகிறார்.

Advertisment

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ரூ.41.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்திட, டெல்லியிலுள்ள தலைமை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன் அனுமதி தந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது?ராஜபாளையம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யும் நோக்கத்துடன், தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் அத்துறையிடம் வலியுறுத்தினார்.

Advertisment

தற்போது, ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் OP முதல் ராஜபாளையம் நகர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், ரூ.41.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு தலைமை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி திறக்கும் பணிகள் நிறைவுற்றதும், அடுத்த மாதமே சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி விடுவார்கள் என்று பெருமிதத்துடன் கூறினார் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.

வாக்களித்த மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணவேண்டுமென்ற சிந்தனையும் செயல்பாடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருப்பது ஆறுதலானது.

Rajapalayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe