வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சார் ஆட்சியராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் வந்தனா கார்க். 2017 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், பயிற்சி முடித்ததும் 2018 மே மாதம், சேலம் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு பயிற்சி முடிந்ததும் அங்கிருந்து திருப்பத்தூர்சப் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sub collector in.jpg)
வந்தனா கார்க், டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றவர் 2017 ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் பேட்ச்சில் ஐ.ஏ.எஸ்சாக தேர்வானவர். தமிழ்நாடு இவருக்கு சர்விஸ் மாநிலமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2018 மே மாதம் சேலம் பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு பின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 19ந்தேதி காலை திருப்பத்தூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு அவ்வலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்படுவதாக அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அதிகாரியாக சிவகுரு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து தனி மாவட்டத்துக்கான பணிகளும் செய்வார் எனக்கூறப்படுகிறது.
Follow Us