கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள்; புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

New students welcomed enthusiastically school opened after summer vacation

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள், பழைய மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியை ஜெய லதா தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பள்ளி நுழைவு வாயிலில் வரவேற்பு அளித்து மாணவிகள் தலையில் பூ வைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்கள், உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, இலவச தங்கும் விடுதி, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்து வகுப்பறைக்கு இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர்.

New students welcomed enthusiastically school opened after summer vacation

இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜ லட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உறுப்பினர் முத்து முருகன், உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

Kovilpatti schools students
இதையும் படியுங்கள்
Subscribe