New state-of-the-art vehicle arrived at Erode Chief Fire Station

ஈரோடு தலைமை தீயணைப்பு நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் புதிய வாகனம் அரசு சார்பில் வழங்கப்பட்டுபயன்பாட்டிற்குக்கொண்டு வரப்பட்டது.

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் 11 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் தலைமை அலுவலகமாக ஈரோடு காந்திஜி ரோட்டில் செயல்படும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தத்தலைமை தீயணைப்பு நிலையத்தில்2 பெரிய வாகனம், 2 சிறிய வாகனம் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த 5 வாகனங்களுமே சாதாரண தீ விபத்துக்கள் ஏற்பட்டால் அணைப்பதற்கும், ஆயில், பெயிண்ட் நிறுவனம், மின் டிரான்ஸ்பார்மர் தீ சம்பவம் ஏற்பட்டாலோ அதற்கென தனியாக நுரை தளர்வு வாகனம் (அக்யூஸ் பிலிம் போர்மிங் பார்ம்-ஏ.எஃப்.எஃப்.எஃப்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு தலைமை தீயணைப்பு நிலையத்திற்குக் கூடுதலாக ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனத்தில் அனைத்து உதிரி பாகங்களும் பொருத்தப்பட்டு, அங்கிருந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்குப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறியதாவது, 'இந்த புதிய வாகனம் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கியது. பழைய வாகனங்களில் 4,500 லிட்டர் மட்டுமே நீரைத்தேக்க முடியும். ஆனால் புதிய வாகனத்தில் 5,500 லிட்டர் நீரைத்தேக்கி வைக்க முடியும். இதில் டவர் மாஸ் லைட் உள்ளது. மின்சார வசதி இல்லை என்றாலும் இந்த லைட் மூலம் மீட்புப் பணிகளை இரவு நேரத்தில் துரிதமாக மேற்கொள்ள முடியும். மேலும் இதில் தீ விபத்தைத்தடுக்க தண்ணீர் மட்டுமின்றி நுரை கலவையும் 300 லிட்டர் வரை தேக்கும் வசதி உள்ளது. பழைய வாகனத்தில் பம்ப்பை தீயணைப்பு வீரர்கள் பொருத்த வேண்டும். ஆனால் புதிய வாகனத்தில் பம்ப் உள்ளிட்ட மீட்பு வாகனத்தின் அனைத்துப் பகுதிகளையும் வாகன டிரைவரே இயக்கிட முடியும். பழைய வாகனத்தை விட புதிய வாகனம் 3 அடி நீளம் அதிகம் கொண்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. இனி வரும் நாட்களில் புதிய வாகனத்துக்கு முக்கியத்துவம் அளித்து பயன்பாட்டில் இருக்கும்.' என்றனர்.

Advertisment