New SP for Thiruvannamalai district

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த 2017ல் பதவிக்கு வந்தவர் சிபி.சக்கரவர்த்தி. சமூகம்பார்க்காமல், ரவுடிகள் பலரை விரட்டி, விரட்டி கைது செய்து அவர்களை உள்ளே வைத்து எச்சரித்தும், மிரட்டியும் அடக்கி,ஒடுக்க வைத்தார். இதனால் பல முக்கிய சாதி கட்சி ரவுடிகள் அடக்கம், ஒடுக்கமாக இருந்தனர். கரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் பெரிய மாவட்டமான திருவண்ணாமலையில் தீவிரமாக பணியாற்றினார்.

Advertisment

இந்நிலையில் 2020 ஜூலை 10ந் தேதி தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக இருந்த சிபி.சக்கரவர்த்தியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மாநில காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் ஏ.ஐ.ஜி.யாகநியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சிறப்பு சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றிய அரவிந்தன் ஐ.பி.எஸ்.இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.