New sentence for boy in Pocho case

Advertisment

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக, கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

அதன்படி, சிறுவன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் வாரத்தில் ஒரு நாளானஞாயிறு தோறும் சுகாதாரத்துறையினர் கொடுக்கும் பணிகளை செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisment

வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகளை யாரும் செய்யக் கூடாது என்பதற்காக, இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.