Advertisment

பொதுத்தேர்வு கட்டுக்காப்பு மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... தேர்வுத்துறை அறிவிப்பு!

examination

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான் கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் அண்மையில் கசிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வினாத்தாள் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும். தமிழ்நாட்டில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் தேர்வுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும். சிசிடிவி கேமரா செயல்படுவதுடன் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 2 பூட்டுகள் கொண்டு பூட்டியிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களைகண்காணிப்பாளராக நியமிக்கக்கூடாது. பொதுத்தேர்வு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களையேதேர்வுபணியில் ஈடுபடுத்த வேண்டும்' என பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

'

TNGovernment examination education
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe