Published on 07/08/2021 | Edited on 07/08/2021

கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (07/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் சட்டத் திட்ட விதி: 31- பிரிவு: 19- ன் படி திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.