New responsibility for Innocent Divya!

Advertisment

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

அதில், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., திறன் மேம்பாட்டு கழக இயக்குநராகவும், ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை, வருவாய், நிர்வாக ஆணையராகவும், பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் இ.ஆ.ப., ஆவின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ்.க்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.