Advertisment

543 தொகுதிகளிலும் போட்டி: புதிய கட்சி தொடங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன்

karnan

Advertisment

தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று இந்த விழா நடைப்பெற்றது.

கட்சி தொடக்க விழாவில் பேசிய கர்ணன்,

நம் நாட்டில் ஊழலை ஓழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். அரசு துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். எங்கள் கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். இனி வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். கட்சி அலுவலகங்களையும் திறப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

படம்: அசோக்குமார்

Chennai karnan new party
இதையும் படியுங்கள்
Subscribe