ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை உறுதித் திட்டம் என்று கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆண்டுக்கு 365 நாட்களையும் தாண்டி, 625 நாட்கள் வேலை கொடுத்ததாக பல லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில், 2016-2017 ஆம் நிதியாண்டில்தான் இந்த மோசடி நடந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடும் நிலையில், அதிகாரிகளே, போலியான பெயர்களில் அடையாள அட்டை தயாரித்து ஆண்டுக்கு 365 நாட்களே உள்ள நிலையில், 625 நாட்கள் வேலை செய்ததாக கூறி பணத்தை மோசடி செய்திருக்கிறார்கள். அதுபோல போடாத சாலை, கட்டாத தண்ணீர் தொட்டி என்று போலியாக கணக்கெழுதி பல லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளதையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவலை சேகரித்து அம்பலப்படுத்தி இருக்கிறார் சமூக ஆர்வலர் டேனியல்.