ADVERTISEMENT

சூரியூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!

09:17 PM Jun 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவெரம்பூர் சூரியூர் பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு பருவத்தில் 2020-21ம் ஆண்டில் 56 நெல் கொள்முதல் நிலையங்களில் திறக்கப்பட்டு 55,265 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் சன்னரகம் 41 ஆயிரத்து 306 மெட்ரிக் டன். பொது ரகம் 13,959 மெட்ரிக் டன் ஆகும். சன்னரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 1,958 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 1,918 ரூபாயும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 12,678 விவசாயிகளுக்கு 107 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது கோடை பருவத்தை முன்னிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்ள 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் குண்டூர், சூரியூர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்குடி, மணப்பாறை வட்டத்தில் மரவனூர், துறையூர் வட்டத்தில் பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, வைரி செட்டிபாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சு.சிற்றரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT