ADVERTISEMENT

திருச்சிக்கு புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம்- புறக்கணித்த மாநில அரசு;கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு

05:39 PM Sep 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல மக்களிடம் கோரிக்கை எழுந்து கொண்டே இருக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் பஞ்சப்பூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்து வந்து அ.தி.மு.க. ஆட்சியில் பஞ்சப்பூர் இடம் சரியான தேர்வு இல்லை என ரத்து செய்து விட்டு திருச்சி மத்திய சிறைச்சாலை அருகே கொண்டு வரலாம் என்று கடந்த 7 வருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னும் வந்த பாடியில்லை.

இப்போது இருக்கும் மத்திய பேருந்து நிலையம் பெரிய நெருக்கடியான இடமாக இருக்கிறது. இத்தோடு தனியார் ஆம்னி பேருந்துகள் கொண்டு வந்து நிறுத்துவதால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அதுவும் தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால், சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி கோவை என பல ஊர்களுக்கு தனியார் பேருந்து செல்வதால் வார கடைசி என்றாலே திருச்சியை தாண்டி செல்வது என்பது பெரிய சிரமாக இருந்தது.

இதனால் ஆம்னி பேருந்து யூனியனும் எங்களுக்கும் தனி இடத்தை ஒதுக்கி கொடுங்கள் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தாலும் இதை அரசாங்கத்தின் சார்பில் கண்டு கொள்ளவே இல்லை. இது பொதுமக்களுக்கும், ஆம்னி ஓட்டுனர்களுக்கும் பெரிய தலைவலியாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆம்னி பேருந்து யூனியன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காலியாக இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஒதுக்கி தரும்படியும் அதற்குண்டான வாடகையை கொடுத்து விடுகிறோம் என்று பேசி கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் திருச்சி ஜங்சன் வழியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் போகும் வழியில் இரயில்வேக்கு சொந்தமாக காலியிடங்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்த இடத்தை இரயில்வே நிர்வாகம் ராயல் தேவக்குமார் என்கிற ரயில்வே ஒப்பந்தகாரருக்கு டெண்டர் அடிப்படையில் ஒப்பந்தமுறையில் கொடுத்திருக்கிறது. அவர் ஆம்னி யூனியனிடம் பேசி. 100 ஆம்னி பேருந்து ஒரே நேரத்தில் வந்து போகிற வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருகிறேன் என்கிற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் காலியாக இருந்த இடத்தை சுத்தம் பண்ணும் பணி வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இது நாள் வரை ஆம்னி நிறுத்தத்திற்கு இருந்த பிரச்சனை இந்த இட ஒதுக்கீட்டீன் மூலம் மக்கள் நிம்மதியடைவர்கள். மாநில அரசு செய்ய வேண்டிய வேலையை மத்திய அரசின் இரயில்வே தன்னுடைய இடத்தை வாடகைக்கு கொடுத்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதே போன்று ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கும் ஒரு விடிவு பிறக்காதா என மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்…

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT