Skip to main content

இனி பேருந்துகளில் புதுப்படங்கள் பார்க்கலாம்... -நடிகர் விஷால்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

நடிகர் சங்க பொதுச் செயலாளரும் திரைப்படசங்க தலைவருமான நடிகர் விஷால் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை சந்திக்க கடந்த 29ம்தேதி மாலை திண்டுக்கல் மாநகருக்கு வந்தார். அவரை சூப்பர் டிவி உரிமையாளர் ரமேஷ் முரளி உள்பட சில தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்கள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் பிரபல விவேராகிராண்ட் ஹோட்டலில் நடிகர் விஷால்  திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஐம்பதுக்கு மேற்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை  சந்தித்து அவர்களுடைய கருத்துகளை தனித்தனியாக பேசச்சொல்லி கேட்டார்.

 

Find new pictures on buses! Actor Vishal speaking


 

 

 

பிறகு அவர் அளித்த பேட்டியில், 

கடந்த சில  தினங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் காப்பிரைட் கட்டணத்தை குறைக்க கோரியதை தொடர்நது ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்திலிருந்து தற்போது 25% குறைப்பதாக கமிட்டியில் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால் இங்கு  கூடியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தொலைகாட்சி உரிமையாளர்களோ காப்பிரைட் கட்டணத்தை 50% குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதுபோல் உள்ளூர் தொலைக்காட்சியின் தற்போதைய நிலைமை முழுவதையும்  கேட்டறிந்தேன். அதனால் உங்களுடைய கோரிக்கைகளை கமிட்டியில் எடுத்து சொல்லி முடிந்த அளவிற்கு காப்பிரைட் கட்டணத்தை குறைக்க சொல்கிறேன் என உள்ளூர் தொலைகாட்சி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்தார். 




 

Find new pictures on buses! Actor Vishal speaking


 

 

 

மேலும் தொடர்ந்து ஜுலை 5 ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று இதே போல் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதோடு தற்பொழுது பஸ்களில் படங்கள் ஒளிபரப்புவதில்லை. ஆனால் வரும்  ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பஸ்களில் படங்கள் போட இருக்கிறார்கள். இதற்காக ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அந்தக் குழு 3000 தனியார் பஸ் உரிமையாளர்களை சந்தித்து ஒப்பந்தம் அடிப்படையில் பேசி இருக்கிறார்கள். அதன்மூலமாக புதுப் படங்கள் வந்த உடனே ஆன்லைன் மூலமாகவும் பஸ்களிலும் அந்த படங்கள் ஒளிபரப்பாகிவிடும். இந்த  சிஸ்டம் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். முதல் படமாக இரும்புத்திரை வெளியாக உள்ளது. இது எல்லாமே நலிவடைந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காகத்தான்  இப்படி ஒரு முறை கொண்டு வர இருக்கிறோம். என்று கூறினார்.
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.