Skip to main content

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ்டிரைக்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒருநாள் நடந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்தன.

மத்திய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை நாடு முழுவதும் செப். 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு முன்பை விட பல மடங்கு அபராத கட்டணம் மற்றும் வாகனப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி அதிபர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், கனரக வாகன டயர்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் பிரிமீயம உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தொழில் நசிவு காரணமாக இந்தியா முழுவதும் 15 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 2 லட்சம் லாரிகளும் போதிய சரக்குகள் புக்கிங் கிடைக்காததால் வேலையின்றி நிறுத்தப்பட்டு உள்ளன. இதையே நம்பியிருக்கும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இப்படியான சூழலில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் லாரி அதிபர்களிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில் நசிவுக்குக் காரணமான புதிய சட்டத்திருத்ததை திரும்பப் பெறக்கோரியும் லாரி போக்குவரத்தாளர்கள் சார்பில் நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப். 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

new motor vehicle law against lorry owners strike in all over india


இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தமிழகத்தில் மட்டும் இன்று 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஏற்கனவே சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட இடத்திலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சேலத்தில் செவ்வாய்பேட்டை, லாரி மார்க்கெட், ரயில்வே கூட்ஸ் ஷெட் மற்றும் சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய ஜவுளிகள், ஜவ்வரிசி, சுண்ணாம்புக்கல், மளிகை பொருள்கள் லாரிகளில் ஏற்றப்படாமல் கிடங்குகளில் தேங்கிக் கிடந்தன. சரக்கு போக்குவரத்து முடங்கியதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் செவ்வாய்பேட்டை பஜார் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறுகையில், ''ஒருநாள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் சரக்குகள் தேங்கி இருக்கின்றன. சரக்கு ஏற்றிய லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த லாரிகள் இயக்கப்படும். தமிழகத்தில் 85 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.