
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சமீபத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்திருந்தது. குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழியில் ஒரே இரவில் பெய்த44 சென்டிமீட்டர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்தது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதிகளில் வரும் ஐந்தாம் தேதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை.
Follow Us