Advertisment

விரைவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் தகவல்

New low pressure area coming soon - Meteorological Center information

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைப்பொழிவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் இன்றும் நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும். வரும் 16 ஆம் தேதி புதிய காற்று தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

weather rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe