தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறப்பித்துள்ளார்.
2009 தேர்தலில் வெற்றி பெற்றுகடலூர் மக்களவை தொகுதி்யின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் கே.எஸ்.அழகிரி. 1991ல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் கே.எஸ்.அழகிரி.