கரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை... தமிழகத்தில் வருகிறது புதிய சட்டம்??

 New law to punish corona violators ...?!

கரோனா தடுப்புவிதிகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதகாவும்,விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க தொற்றுநோய்ச்சட்டத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த அவசரச் சட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோர்ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டம் குறித்த விதிகள் அடங்கிய கோப்புகளை சட்டத்துறையிடம் ஒப்படைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும்,இதைச் சட்டத்துறைகையில் எடுத்தவுடன் நோய்த் தடுப்புக்கான புதிய சட்டம் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சட்டம் தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe