New initiative for police with children

ஒரு கதை சொல்லட்டுமா சார் என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு போட்டியை நடத்தியது.

Advertisment

கரோனாவினால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் தங்களது திறமையை மற்றும் கற்பனை திறனை வெளிக்கொண்டு வரும் பொருட்டு ஆன்லைன் மூலமாக இந்த போட்டியை நடத்தினார்கள். இந்த போட்டியில் பல குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள்.

Advertisment

New initiative for police with children

போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் உதவி ஆனந்தன் அவர்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இணக்கத்தை ஏற்படுத்த, இதுபோல இன்னும் பல போட்டிகளை நடத்தினால் தடை காலங்களில் வீட்டிலிருக்கும் குழந்தைகள், தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள உந்துதலாகவும் மன மகிழ்ச்சியை கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என்று காவல் துறையினர் மற்றும் பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் அமைப்பை பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Advertisment