க

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர். ரவி, வரும் 18ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகலாந்து ஆளுநராக உள்ள அவர், வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக தற்போது உள்ள பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் சென்று ஆளுநராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment