New Governor RN Ravi arrives in Chennai

Advertisment

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார்.

அதேபோல், தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறைத்தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் ஆளுநரை வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி வரும் செப்டம்பர் மாதம் 18- ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.