Advertisment

புதிய கல்வி கொள்கை... தமிழகத்தில் இந்தி!

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவுசமர்ப்பிக்கப்பட்டது.

Advertisment

 New Educational Policy ... Hindi in Tamilnadu

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள்தெரிந்துகொள்ள புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன்இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில்இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாகஎதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் நீர்மேலாண்மை, யோகா ஆகியவற்றையும் பாடமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்குகருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

cg education hindi Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe