கடந்த 34 ஆண்டுகளாகக் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் கடந்த 29-ஆம் தேதிசெய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் புதிய கல்விக் கொள்கை குறித்துதங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ள விஜயகாந்த் தாய்மொழிக் கல்வியைஎட்டாம் வகுப்புவரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.