புதிய கல்விக்கொள்கையைப் பற்றி ஆராய அபூர்வா தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, துணைவேந்தர்கள் ராஜேந்திரன் (அழகப்பா), தாமரைச்செல்வி (திருவள்ளூர்), கிருஷ்ணனுக்கு (காமராஜர்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.