புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

Advertisment

NEW DISTRICTS COLLECTORS TN GOVT ORDER

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமனம். அதேபோல் தென்காசி ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன் நியமனம். மேலும் செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினியை நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு. புதிய மாவட்டங்களில் ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாவட்டங்களுக்கான காவல் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு ஏற்கனவே நியமித்திருந்தது.