Published on 03/02/2022 | Edited on 03/02/2022

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் புதிய இயக்குநராக முனைவர் அகிலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இரண்டாவது பெண் இயக்குநராக தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்ட அவருக்கு பேராசிரியர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியராக புதுச்சேரியில் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், பிளாக் செயின் தொழில்நுட்பம் பெரும் தரவு பகுப்பாய்வு இயல், அமைச்சு இயல், தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் தனது பங்களிப்பை தந்துள்ளார்.
சிறந்த கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் கடந்த 32 ஆண்டுகள் பணியாற்றி அதன் அனுபவங்களோடு இன்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.