New Deputy Commissioner of Police in charge of Salem

சேலம் மாநகர தெற்கு சரக புதிய காவல்துறை துணை ஆணையராக எஸ்.பி.லாவண்யா திங்கள்கிழமை (ஜூன் 13) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisment

சேலம் மாநகர தெற்கு சரக காவல்துறை துணை ஆணையராகப் பணியாற்றி வந்தவர் மோகன்ராஜ். இவர், மதுரை மாநகர துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisment

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எஸ்.பி.லாவண்யா, சேலம் மாநகர தெற்கு சரக துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அவர், திங்கள்கிழமை (ஜூன் 13) சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறை ஆணையர் நஜ்மல்ஹோடாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். புதிய துணை ஆணையருக்கு, மற்ற காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.