
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில்,வரும் 17ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதிவரை தென் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அகரம் சீகூர் மற்றும் மதுராந்தகத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)