Advertisment

காதல் மணம்புரிந்த புதுமணத் தம்பதி படுகொலை

new couple incident thoothukudi district police investigation

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் எட்டயபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த வீரப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா, தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி உறவினரான மாணிக்கராஜ் என்ற கூலித்தொழிலாளியை மணந்துகொண்டார். சில நாட்கள் வெளியூரில் இருந்த அவர்கள், பின்னர் ஊர் திரும்பியுள்ளனர்.

Advertisment

ஆனால், ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்ததால் ஊர் பஞ்சாயத்து பேசி, அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். இந்த நிலையில், ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த முத்துக்குட்டி, அவரையும், மாணிக்க ராஜையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தம்பதியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தலைமறைவான முத்துக்குட்டியை கைது செய்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ettayapuram Kovilpatti
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe