உருமாற்றம் பெற்ற கரோனா பரவுவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற கரோனா பரவுவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "பிரிட்டனில் இருந்து வருவோரை மட்டும் அல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டாயக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை (30/12/2020) விசாரணைக்கு வரவுள்ளது.