Advertisment

கட்சிக்கொடி பேனர்களுக்கு தடை-ஐ.பி.எல்.லில் புதிய கட்டுப்பாடுகள்

நாளை தமிழகத்தில்நடக்கவிருக்கும் சென்னை-கொல்கத்தா போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியை காணவரும் ரசிகர்கள் கட்சி கொடிகள், பேனர்கள், மின்னுனு பொருட்களான மொபைல், லேப்டாப், கேமரா போன்றவை எடுத்துவரக்கூடாது என நிறையகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

IPL

ஏற்கனவே எளிதில்தீ பிடிக்கும் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி, உணவு, தண்ணீர் பாட்டில் போன்ற பொருள்களுக்கு தடைவிதித்திருந்தாலும் தற்போது பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பார்வையாளர்கள்யாரேனும் மைதானத்தைவரம்பு மீறி அடைந்தால் வெளியேற்றப்படுவார்கள். ஒழுங்கின செயல்களில் பார்வையாளர்கள் ஈடுபட்டாலும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளதுஐபிஎல் நிர்வாகம்.

அதேபோல் 2-ஆம் தேதி விற்பனையான டிக்கெட்டின் பின்புறம் கருப்பு உடை அணிந்துவருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அச்சிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது .

protest police Chepauk IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe