New Chief Secretary; Tamil Nadu Government Notification

Advertisment

தமிழக அரசின் 50 வதுபுதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த முருகானந்தம் தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். திருநெல்வேலிசார் ஆட்சியராகபணியைத் தொடங்கிய முருகானந்தம், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்தார். தொடர்ந்து 2022ல் தமிழ்நாடு நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார்.

Advertisment

nn

இந்நிலையில் ஏற்கனவே பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது ஷிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.