Advertisment

புதிய தலைமை செயலகம் கட்டியதில் 375 கோடி இழப்பு; உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!

dmk

Advertisment

புதிய தலைமை செயலகம் கட்டியதில் அரசுக்கு சுமார் 375 கோடி இழப்பது ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில்புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2011-ஆம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.இதனை அடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை வேண்டும் என அன்றைய திமுக தலைவர் கலைஞர் வழக்கு தொடர்ந்ததன்மூலம்இடைக்காலத்தடை பெறப்பட்டது.அதனை அடுத்து தற்போது வரை அதன்பேரிலான விசாரணையை ரகுபதி ஆணையம் நடத்தவில்லை. ரகுபதி விசாரணை ஆணையத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட நான்கு கோடி செலவு செய்யப்பட்டதை ஆட்சேபித்த நீதிபதிகள் இதுபோன்ற விசாரணை ஆணையங்களுக்காக மக்களின் வரி பணம் வீணாவது குறித்து கேள்வி எழுப்பினார்.

ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு வழக்கு மாற்றப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிதிருந்தது. இந்நிலையில் இன்று குழுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் அமர்வில்நடந்த விசாரணையில் புது தலைமை செயலகம் கட்டப்பட்டதில் 375 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. திமுக தொடர்ந்த தடை நீக்க வழக்குக்கு தமிழக அரசு விரிவானபதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்.

new building ragupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe