தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்க உள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார்.